ரீல்ஸ் மோகத்தில் எல்லை மீறிய அமைச்சர் வன்னியரசு..! முதுமலை காட்டுக்குள் அவர் செய்த காரியத்தை பாருங்க!

 
Q

நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த பத்தாம் தேதி சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு வருகை தந்திருந்தார்.

அவர், வனத்துறை ஊழியர்களுடன் வனப்பகுதிகளுக்குள் சென்று இருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளை ஆபத்தை உணராமல் ரோந்து வாகனத்திலிருந்து இறங்கி விரட்டித் தொந்தரவு செய்துள்ளார். அதை வீடியோவாகப் பதிவு செய்து, 'ரீல்ஸ்' ஆகவும் வெளியிட்டுள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகத்திற்குள் வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதோடு, அதனை விளம்பரப்படுத்தும் விதமாக இணையத்தில் பதிவிட்டுள்ளது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.