"பாரதிதாசன் படிக்கத்தான் நான் அமைச்சர் ஆனேன்" - வன்னி அரசு

 
"பாரதிதாசன் படிக்கத்தான் நான் அமைச்சர் ஆனேன்" - வன்னி அரசு

மாணவர் பாரதிதாசன் கல்விக்கு அரசு அனைத்து வகையிலும் உதவும் என அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயிலும் பாரதிதாசன் என்ற மாணவருக்கு உதவித் தொகை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “மலேசியாவில் பயணம் மாணவர் பாரதிதாசன் படிப்பிற்கு தமிழக அரசு முழுமையாக உதவி செய்யும். மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் வேண்டாம். மெயிலுக்கு மெயிலில் பதில் அனுப்ப வேண்டும். வீடியோ பதில் ஏற்புடையதல்ல. பாரதிதாசன் படிக்கத்தான் நான் அமைச்சர் ஆனேன். அவர் படிப்புக்கு தவெக அரசு துணையாக இருக்கும். அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.12 லட்சம் நிதியுதவி தந்துள்ளோம். மீதித் தொகை அவருக்கு போய் சேரும். பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் அரசு உதவும். தவெக அரசு அமைந்த உடன் கல்வித்துறை உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தம்பி பாரதிதாசனின் ஆராய்ச்சி படிப்புக்கான உதவித்தொகை 2 நாட்களில் வழங்கப்படும்” என்றார்.