"எதைப் பேசக்கூடாது என்கின்ற ஒரு வரையறை இல்லாமல் பேசுகிறார்" - அமைச்சர் வன்னி அரசு

 
அ

அண்மை காலமாக மனப்பிறழ்வு நோயால் ஆ.ராசா பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.


விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வன்னி அரசு, “தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றவர்களுக்கு வெட்கமில்லை என ஆ.ராசா கூறுகிறார். அண்மை காலமாக மனப்பிறழ்வு நோயால் ஆ.ராசா பாதிக்கப்பட்டிருக்கிறார். எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்கின்ற ஒரு வரையறை இல்லாமல் பேசுகிறார். சர்ச்சையாக பேசும் ஆ.ராசாவை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். விசிகவினரை குறி வைத்து தேவையற்ற வார்த்தைகளை பேசுவதை ஆ.ராசா நிறுத்த வேண்டும். 2006 இல் அதிமுக கூட்டணியில் வென்ற விசிக, திமுக ஆட்சிக்கு ஆதரவு அளித்தது நினைவில்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.