விளையாட்டு துறைக்கென தனி கொள்கை கொண்டுவரப்படும்- உதயநிதி ஸ்டாலின்

 
கலைஞர் நூற்றாண்டில் பாசிஸ்ட்டுகள் வீழ்ந்தார்கள் என்ற வரலாற்றை படைக்க உழைப்போம்- உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் விளையாட்டு துறைக்கென தனி கொள்கை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சனாதன சர்ச்சைப் பேச்சு | தமிழக அரசு, உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்ச  நீதிமன்றம் நோட்டீஸ் | Sanatana issue Supreme Court notice to TN govt, Udhayanidhi  Stalin to respond ...

சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கொரமண்டல் நட்சத்திர விடுதியில் சர்வதேச விளையாட்டு அறிவியல் குறித்த இரு நாள் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, தமிழ்நாடு விளையாட்டுத்துறை செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேக்நாத் ரெட்டி, விளையாட்டு அறிவியல் துறை நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கடந்த நூற்றாண்டில்  அறிவியலின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு அறிவியலும் தொழில்நுட்ப கருவிகளும் அத்தியாவசியமானது. ஒலிம்பியாட், ஹாக்கி என பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடத்தபட்டுள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் விளையாட்டு துறைக்கென தனி கொள்கை கொண்டு வரப்பட உள்ளது. வெறும் ஆலோசனை மட்டும் நடத்தும் கூட்டமாக இந்த கருத்தரங்கு இருக்காது. விளையாட்டு போட்டிகளை நடத்தும் மாநிலமாக மட்டும் அல்லாமல் சர்வதேச அரங்கில் வெற்றி பெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக மாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்" என்றார்.

பரபரப்பு.. உதயநிதி ஸ்டாலின் வீட்டின் வெளியே குவிந்த 10க்கும் மேற்பட்ட  போலீஸ்.. என்ன நடக்கிறது? | Extra security deployed in Udhayanidhi Stalin  house after the Sanatana Dharma ...

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் கருத்தரங்கு இன்று தொடங்கி நாளை வரை இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் மருத்துவர்கள், விளையாட்டுத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கலந்துகொண்டு விளையாட்டு துறையில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசப்படும். மேலும், தமிழ்நாட்டில் இது மாதிரி கருத்தரங்கு நடத்தப்படுவது முதல் முறை. இதன் மூலம் ஏராளமான வீரர்கள் பயன்பெறுவார்கள் என பேசினார். இந்த மாநாட்டில் பெறப்படும் கருத்துகளை வைத்து தமிழ்நாடு விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” எனக் கூறினார்.