திமுக மாநாட்டு திடலுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

 
tn

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டு திடலுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் மாநாட்டு திடலுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சரை வரவேற்கும் விதமாக மாநாட்டு திடல் பகுதியில் கம்போடியா  கலைஞர்களின் நடனம், கேரள செண்டை மேளம், கதகளி, மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். 


இது தொடர்பாக உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில்,  திமுக இளைஞரணியின்-ன் 2 ஆவது மாநில மாநாடு நடைபெறுகிற சேலம் மாநாட்டுத் திடலுக்கு வருகை தந்த கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' அவர்களை வரவேற்றோம். தளபதியாய் அன்று தி.மு.கழக இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டை நடத்திக்காட்டி, தலைவராக இன்று இரண்டாவது மாநில மாநாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள். உணர்வுமிக்க இளைஞர்களின் உணர்ச்சிமிகு வாழ்த்து முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, தலைவர் அவர்களின் வாழ்த்துகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாட்டின் முந்தைய நாள் மாலை நிகழ்ச்சிகள் தொடங்கின.