அண்ணாவின் 115வது பிறந்தநாள் - மரியாதை செலுத்துகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 115வது ஆண்டு பிறந்த நாளான 15.9.2023 அன்று காலை 8.00 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் - கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
கழக மாநில அமைச்சர் பெருமக்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.