“கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” வழங்கும் திட்டத்தின் கீழ் 335 உபகரணங்கள் - அமைச்சர் வழங்கினார்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” வழங்கும் திட்டத்தின் கீழ் 335 விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,600 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பில் “கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” வழங்கும் திட்டத்தை விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் செயல்படுத்தி வருகிறோம். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளுக்கு 33 விளையாட்டுகளுக்கான உபகரணங்களை வழங்கும் வகையில் 335 Sports Kits-ஐ செங்கல்பட்டில் இன்று வழங்கினோம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,600 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பில் “கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” வழங்கும் திட்டத்தை விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் செயல்படுத்தி வருகிறோம்.
— Udhay (@Udhaystalin) March 14, 2024
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளுக்கு 33 விளையாட்டுகளுக்கான… pic.twitter.com/0zC332ziBx
இந்த உபகரணங்கள் மூலம் பயிற்சிகள் மேற்கொண்டு விளையாட்டுத்துறையில், சாதனைகள் படைக்க நம் வீரர்கள் – வீராங்கனைகளை வாழ்த்தினோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.