பெண்களின் வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்போம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

 
udhayanidhi

திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறும் அவர்களுக்கு உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து, அவர்களின் ஏற்றத்துக்கு என்றும் துணை நிற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

அரசின் திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ‘#நீங்கள்_நலமா’ திட்டத்தின் கீழ், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – நான் முதல்வன் – தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியுதவி போன்றவற்றின் பயனாளிகளிடம் இன்று தொலைபேசி வாயிலாக அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை காயத்ரி – திண்டுக்கல்லைச் சேர்ந்த தங்கை செல்வ பிருந்தா ஆகியோர் பொறியியல் படிக்கும் போதே நான் முதல்வன் திட்டத்தின் கீழ், #Python Programming Language மற்றும் #IBM நிறுவனத்திடமிருந்து பயிற்சிகளை பெற்றனர்.


எளிய பின்புலத்தைக் கொண்ட முதல் தலைமுறை பட்டதாரிகளான அவர்கள், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மென்பொருள் பொறியாளராக பணிக்குச் சேர்ந்துள்ளதாக கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  அதே போல, ஈரோட்டைச் சேர்ந்த விஜயா - மயிலாடுதுறை நிர்மலா ஆகியோர், தங்களின் அன்றாடச் செலவுக்கும் – சேமிப்புக்கும், கலைஞர் உரிமைத் திட்டம் பேருதவியாக இருப்பதாக அகம் மகிழ்ந்தனர். கழக அரசின் திட்டங்களால் பயன்பெறும் அவர்களுக்கு உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து, அவர்களின் ஏற்றத்துக்கு என்றும் துணை நிற்போம் என உறுதியளித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.