விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் தமிழ்நாடு - அமைச்சர் உதயநிதி

 
udhayanidhi

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பல்வேறு சாதனைகளை படைப்பதோடு, அதற்கான அங்கீகாரங்களையும் தொடர்ந்து பெற்று வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பல்வேறு சாதனைகளை படைப்பதோடு, அதற்கான அங்கீகாரங்களையும் தொடர்ந்து பெற்று வருகிறது.  இந்நிலையில்,  #KheloIndiaYouthGames2023-ல் முதல் முறையாக 2 ஆம் இடம் பிடித்ததற்கான 1st Runner கோப்பை @sportstarweb  சார்பில் வழங்கப்பட்ட Best State For Promotion of Sports விருது மற்றும்  @FollowCII Business Sports Awards நிகழ்வில் வழங்கப்பட்ட Best State Promoting Sports விருது ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கி மகிழ்ந்தோம்.


இந்திய துணைக் கண்டத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதற்கு தொடர்ந்து ஊக்கமும் - உற்சாகமும் அளித்து வரும் நம் முதலமைச்சர் அவர்கள், கோப்பை மற்றும் விருதுகளை பெற்றமைக்காக நம்மை வாழ்த்தினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.