தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் அமைத்து வருகிறது திமுக அரசு - உதயநிதி

 
Udhayanidhi

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு உலகத்தரத்தில் அமைத்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,  தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் அமைத்து வருகிறது நம் திராவிட மாடல் அரசு  சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் விரிவாக்கம் எனப் போக்குவரத்து நெரிசலை குறைக்க நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 


அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் கரிகலவாக்கம் பகுதியில், சென்னை எல்லை சாலை திட்டம் மூலமாக எண்ணூர் துறைமுகம் முதல் திருப்பெரும்புதூர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் வழியாக மாமல்லபுரம் வரை நடைபெற்று வரும்  சாலை - மேம்பாலப் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். 132.87 கிலோமீட்டர் தொலைவுக்கு அமையவுள்ள இந்த சாலைக்கான பணிகள் 2025-ல் நிறைவடையும் என்று அதிகாரிகள் நம்மிடம் கூறினர்.  திட்டமிட்ட படி உரிய காலக்கெடுவுக்குள் சாலையை தரமானதாக அமைக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் வலியுறுத்தினோம்.
 இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.