விமர்சிப்பவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்- உதயநிதி ஸ்டாலின்

 
அடுத்த பிறந்தநாளுக்கு நான் துணை முதல்வரா? உதயநிதி ஸ்டாலின் பதில்

என்னை விமர்சிப்பவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல. பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன். எனக்கு வாழ்த்து கூறுபவர்களுக்கு நன்றி. என்னை விமர்சித்தவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்" எனக் கூறினார்.