எத்தனை வழக்குகள் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் - அமைச்சர் உதயநிதி அதிரடி
Sep 4, 2023, 14:28 IST1693817903782

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அன்று கூறியதை விட, இன்று அதிக உறுதியுடன் இருக்கிறேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாதியை வைத்துக்கொண்டு கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருந்தனர், அதற்கு சட்ட போராட்டம் நடத்தினோம்;அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு தெரிவிக்கப்படது, அதையும் மீறி உரிமை பெற்று தந்தோம்;சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அன்று கூறியதை விட, இன்று அதிக உறுதியுடன் இருக்கிறேன்.
நான் பேசியது யூடியூபில் உள்ளது, எத்தனை வழக்குகள் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்; சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியே திமுக; மதத்திற்கு எதிராக நான் பேசவில்லை, மதத்தின் உள் இருக்கும் சாதிய பாகுபாடுகளை ஒழிக்க தான் பேசினேன்" என்றார்.