முத்துராமலிங்கனாரின் பணிகளை போற்றுவோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பிற்படுத்தப்பட்ட - ஏழை - எளிய - விளிம்பு நிலை மக்களின் ஏற்றத்துக்காக உழைத்த முத்துராமலிங்கனாரின் பணிகளை போற்றுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள், குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினார். முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மதுரை மேயர் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்த நினைவிடம் வருகின்றனர்.
குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர். அடிமை விலங்கை உடைத்தெறிவதற்கான போராட்டத்தில் வாய்ப்பூட்டு சட்டத்தை எதிர்கொண்டவர்.
— Udhay (@Udhaystalin) October 30, 2023
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளான இன்று அவரது பணிகளை நினைவுகூர்வோம்.
பிற்படுத்தப்பட்ட - ஏழை - எளிய -… pic.twitter.com/gryhctir3B
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர். அடிமை விலங்கை உடைத்தெறிவதற்கான போராட்டத்தில் வாய்ப்பூட்டு சட்டத்தை எதிர்கொண்டவர். விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளான இன்று அவரது பணிகளை நினைவுகூர்வோம். பிற்படுத்தப்பட்ட - ஏழை - எளிய - விளிம்பு நிலை மக்களின் ஏற்றத்துக்காக உழைத்த முத்துராமலிங்கனாரின் பணிகளை போற்றுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.