துறைமுகம் தொகுதியில் ரூ.44.92 கோடியில் கட்டப்பட்டுள்ள 288 புதிய வீடுகள் - அமைச்சர் திறந்து வைத்தார்!

 
udhayanidhi

சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் திட்டப்பகுதியில் இருந்த பழைய வீடுகளுக்கு பதிலாக, ரூ.44.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 288 புதிய வீடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கீற்றுகளையும், தார்ப்பாய்களையும், கூரைகளாகக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக கான்கிரீட் வீடுகளை நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தந்தார்கள்.  இந்தத் திட்டத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக, ‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’  மூலமாக ஏராளமான குடியிருப்புகளை நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் கட்டித் தந்து வருகிறார்கள்.


அந்த வகையில், துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் திட்டப்பகுதியில் இருந்த பழைய வீடுகளுக்கு பதிலாக, ரூ.44.92 கோடி மதிப்பில் 288 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை, இன்றைக்கு திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தோம். திட்டப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தோம். குடியிருப்பு நலச்சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தி வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, புதிய இல்லத்தில் குடியேறவுள்ள அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தோம் என குறிப்பிட்டுள்ள்ளார்.