செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!

 
udhai

செஸ் விளையாட்டில் முத்திரை பதித்து வரும் விளையாட்டு வீரர், வீராங்கணைகளுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவித்தொகை வழங்கினார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,  நம் திராவிட மாடல் அரசில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத் துறை எண்ணற்ற உயரங்களை தொட்டு வருகிறது. விளையாட்டில் திறமையுள்ள ஒவ்வொரு வீரர் - வீராங்கனையையும் ஊக்கப்படுத்தி , அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறோம். 


அதன் தொடர்ச்சியாக, செஸ் விளையாட்டில் முத்திரை பதித்து வரும் தம்பிகள் @rpraggnachess, @DGukesh ஆகியோருக்கு கழக அரசின் ELITE திட்டத்திட்டத்தின் கீழும், செஸ் வீராங்கனை சகோதரி @chessvaishali-க்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்துமென மூவருக்கும் தலா ரூ.15 லட்சத்துக்கான காசோலைகளை சர்வதேச அளவிலான பயிற்சிகளை பெறுவதற்காக இன்று வழங்கினோம். நம் தமிழ்நாட்டு செஸ் வீரர் - வீராங்கனையருக்கும் என் அன்பும், வாழ்த்தும் என குறிப்பிட்டுள்ளார்.