இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் கமல்ஹாசன் - உதயநிதி புகழாரம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் என அழைக்கப்படும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் @ikamalhaasan சார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
— Udhay (@Udhaystalin) November 7, 2023
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது…
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை. கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் - சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.