பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்திய துணை முதலமைச்சர் உதயநிதி!

அண்ணா நினைவு நாளை ஒட்டி, சென்னை பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணாவின் 56ஆவது நினைவு தினத்தையொட்டி அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தார். வாலாஜா சலையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை பேரணியாக வந்து மரியாதை செலுத்தினார். மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் மரியாதை செய்தார்.
இந்த நிலையில், அண்ணா நினைவு நாளை ஒட்டி, சென்னை பார்த்தசாரதி கோயிலில் பொது விருந்து நடைபெற்றது. இந்த பொது விருந்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதேபோல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் இதில் கலந்துகொண்டார்.