நாகை மக்களவை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை
நாகப்பட்டினம் மக்களவை தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் மக்களவைத் தொகுதி வாரியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் இன்று கலந்துரையாடினோம்.
தி.மு.கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் மக்களவைத் தொகுதி வாரியாக நடைபெற்று வருகின்றன.
— Udhay (@Udhaystalin) February 1, 2024
இந்நிலையில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்… pic.twitter.com/7hmuoIz724
நாகை மக்களவைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசுத் திட்டங்களின் தற்போதைய நிலை - தேர்தல் முன்னேற்பாடு - கள நிலவரம் - தொகுதி பார்வையாளர்கள் - பாக முகவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தோம். விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் - மீனவர்கள் - ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - சிறுபான்மையின மக்கள் நிறைந்த நாகைத் தொகுதியில் நாம் பெறுகிற வெற்றி மிக முக்கியமானது. என்பதை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்று உரையாற்றினோம் என குறிப்பிட்டுள்ளார்.