மூத்த பத்திரிகையாளர் சு.குமரேசன் மறைவு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

 
Udhayanidhi

விகடன் குழும முன்னாள் முதன்மை புகைப்பட கலைஞரான மூத்த பத்திரிகையாளர் சு.குமரேசன் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விகடன் குழும முன்னாள் முதன்மை புகைப்படக் கலைஞரான மூத்த பத்திரிகையாளர் சு.குமரேசன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின், பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்களை எடுத்தவர் - கழகத்தின் முக்கிய தருணங்களையும் - தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளையும் புகைப்படமாக ஆவணப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்.


அவருடைய மறைவு இதழியல் புகைப்படக்கலைக்கு பேரிழப்பு ஆகும். குமரேசன் அவர்களுடைய மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.