மாற்றுத்திறனாளி தடகள வீரர் ராஜேஷ்க்கு செயற்கை கால்கள் பொறுத்த நிதியுதவி - அமைச்சர் உதயநிதி வழங்கினார்

 
tn

மாற்றுத்திறன் தடகள வீரர் ராஜேஷ்க்கு செயற்கைக் கால்கள் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து ₹12 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய ஒன்றியத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதற்காக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  அதே போல, ஆண்கள் - பெண்கள் - மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் விளையாட்டுத்துறையில் சாதிக்க துணை நின்று வருகிறோம்.


அந்த வகையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் தடகள வீரர் சகோதரர் ரா.ராஜேஷ் அவர்களுக்கு செயற்கைக் கால்கள் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து ரூ.12 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கி வாழ்த்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.