பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 
Udhayanidhi

பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - பாசிசம் வீழட்டும்! ஜனநாயகம் வெல்லட்டும்’ என தொகுதிவாரியான பிரச்சாரக் கூட்டங்கள் வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டங்களை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றோம். இக்கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் - பொறுப்பு அமைச்சர்கள் - மாவட்டக் கழக செயலாளர்கள் - சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து பேசுவதோடு, 10 ஆண்டு காலமாக மாநில உரிமைகளை பறித்து பாசிஸ்ட்டுகளுக்கும் - அவர்களுக்கு துணை நின்று தமிழ்நாட்டுக்கு துரோகமிழைத்த அடிமைகளுக்கும் முடிவு கட்டுவதற்கும், உரிமைகளை மீட்கவும் தலைவர் அவர்களின் குரலாக எதிரொலிப்போம் என்று உரையாற்றினோம் என குறிப்பிட்டுள்ளார்.