பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 
udhayanithi stalin

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். 

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காலை சிற்றுண்டி திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் வழங்கும் திட்டத்தின், 2-ம் கட்டத்தினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் நேற்று தொடங்கி வைத்தார். 

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் அழகு நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில், முதல்மைச்சர் காலை உணவு திட்டம் குறித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறாஇ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு சாப்பிட்டார். அவருடன் அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோரும் காலை உணவு சாப்பிட்டார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.