எந்த ஒரு தேசிய சின்னத்தையும் அவமதிக்கும் நோக்கம் இல்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு

ரூபாய் குறியீட்டுக்கு பதிலாக ரூ என்ற இலச்சினையை பயன்படுத்தியது ஏன் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட்டிற்கான இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அதில், 'சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட' என்ற வாசகத்துடன், "2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, எல்லார்க்கும் எல்லாம்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீடுக்கு பதிகாக 'ரூ' என்ற இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மும்மொழிக்கொள்கை விவகாரம் மற்றும் இந்தி திணிப்பு விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு ரூ இலச்சினையை பயன்படுத்தியது தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. தமிழ்நாடு 'பட்ஜெட்' ஆவணத்தில் இந்தியா ரூபாய் குறியீடு மாற்றம் செய்யப்பட்டிருப்பது பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில், ரூபாய் குறியீட்டுக்கு பதிலாக ரூ என்ற இலச்சினையை பயன்படுத்தியது ஏன் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், எந்த ஒரு தேசியச் சின்னத்தையும் அவமானப்படுத்துவதோ, குறைத்து மதிப்பிடும் நோக்கமோ இல்லை. இந்திய ஒருமைப்பாட்டிலும், இறையாண்மையிலும், நாட்டின் வளர்ச்சியிலும் நாம் பெரும் மதிப்பு கொண்டிருக்கக் கூடியவர்கள் என கூறியுள்ளார்.