“மெட்ரோ ரயிலுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை! ரூ.26,000 நாங்க கொடுத்தோம்”- தங்கம் தென்னரசு
Jan 19, 2025, 12:08 IST1737268730752

சென்னை மெட்ரோ பணிகளுக்கு ரூ.26,000 கோடி சொந்த நிதியை தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, “மெட்ரோ ரயிலுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. சென்னை மெட்ரோ பணிகளுக்கு ரூ.26,000 கோடி சொந்த நிதியை தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது. மின்சாரத் துறையை சீர்செய்ய தமிழ்நாடு அரசு ரூ.50,000 கோடி வழங்கியுள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுவதால் தமிழ்நாடு அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 40% நிதியை வடமாநிலங்கள், பாஜக ஆளும் மாநிலங்களுக்கே மத்திய அரசு வழங்குகிறது. தென் மாநிலங்களுக்கு வெறும் ரூ.27, 000 கோடியை வழங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் ரூ.31,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.