கூட்டணி முறிந்தாலும் அதிமுக-பாஜக இடையே ரகசியத் தொடர்பு: தங்கம் தென்னரசு

 
தங்க தென்னரசு செய்தியாளர் சந்திப்பு

அரசின் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் போது அவையில் இருக்க கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க.வினர் பொய்யான காரணங்களை சொல்லி வெளிநடப்பு செய்ததாக நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தங்க தென்னரசு செய்தியாளர் சந்திப்பு

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர், “எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல். கூட்டணி முறிந்தாலும் அதிமுக-பாஜக இடையே ரகசியத் தொடர்பு உள்ளது. காரணத்தைத் தேடி அதிமுக வெளிநடப்பு செய்தது. அரசின் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் போது அவையில் இருக்க கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க.வினர் பொய்யான காரணங்களை சொல்லி வெளிநடப்பு செய்தது. டெல்லியில் இருப்பவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்கள் எனக் கருதி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. 

அதிமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பேரவையில் விரிவாக விளக்கமளித்தார். மீன்வள பல்கலைக்கழகம் 2012-ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. மீன்வள பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபோது, எந்த தலைவரின் பெயரும் வைக்கப்படவில்லை. மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும் என்ற மசோதாவும் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநருக்கோ, குடியரசுத்தலைவருக்கோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனுப்பி வைக்கும் போது, With Held என்று சொல்வது நிராகரிப்பதாகவே பொருள்” எனக் கூறினார்.