தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது- தங்கம் தென்னரசு

 
தங்க தென்னரசு செய்தியாளர் சந்திப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

தங்க தென்னரசு செய்தியாளர் சந்திப்பு

கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள 9 மாவட்டங்களின் தலைமைப் பொறியாளர்களுடன் காணொலி மூலம் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “மின் தளவாட பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும். மிக கனமழை காரணமாக ஏற்படும் மின் விநியோக பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும் ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும். புகார்களை 9498794987 என்கிற எண்ணில் தெரிவிக்கலாம்” என்றார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24 மணிநேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 9498794987 என்ற அலைபேசி எண்ணின் வாயிலாகவும், அனைத்து மின் பகிர்மான வட்ட மின் தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.