சாம்சங் வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை -அமைச்சர் தங்கம் தென்னரசு

 
ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...  

சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் பிரச்சனையில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார் என  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. போராடும் சாம்சங் தொழிலாளர்களை விரோதமாக பார்க்கவில்லை. அடக்குமுறை நடக்கவில்லை. காவல்துறையோடு மோதலில் ஈடுபட்டவர்கள்தான் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கபடுகின்றனர். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர அரசு தயாராக உள்ளது.


சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.5000 கூடுதலாக வழங்கப்படும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குளிரூட்டப்பட்ட பேருந்து வசதிகள் உருவாக்கித்தரப்படும். தொழிலாளர்களை மதிக்கக்கூடிய அரசு திமுக. சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் பிரச்சனையில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார்” என்றார்.