விதிகளை மீறும் சாயப்பட்டறை ஆலைகள் மீது கடும் நடடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

 
thangam thennarasu thangam thennarasu

பவானிசாகர் ஆற்றுப் பகுதியில் விதிகளை மீறும் சாயப்பட்டறை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எம்.எல்.ஏ சுதர்சனம்,  பொன்னேரி தாலுகாவை பிரிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். நிதியமைச்சர் நிதி ஒதுக்கினால், நிச்சயம் பிரிக்க வாய்ப்பு உள்ளது என கூறினார். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வட்டங்கள் பிரிப்பதற்கான கோரிக்கைகள் பல வந்திருக்கின்றன. நிதி நிலைக்கு ஏற்ப இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

பவானிசாகர் ஆற்றுப் பகுதியில் சாயப்பட்டறை இயங்க வழங்கப்பட்ட அனுமதியை அரசு திரும்பப் பெற வேண்டும்" என அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார். பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பவானி ஆற்றின் கரையில் இருந்து 500 மீ தூரத்தில், சாயப்பட்டறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்தும் சில புகார்கள் வந்துள்ளன. ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேறுவது சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. விதிகளை மீறும் ஆலைகள் மீது கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கூறினார்.