சாதி வாரி கணக்கெடுப்பு...மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? - அமைச்சர் சிவசங்கர் கேள்வி

 
Sivasankar

சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுளார். 

இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவோடு கைகோர்த்து மக்களை ஏமாற்றி வருகிறீர்கள். இட ஒதுக்கீட்டிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா அன்புமணி ?. வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுகவை நிபந்தனையின்றி ஆதரிக்க தயார் என்று சொல்கிறார் அன்புமணி. தேர்தல் நேரத்தில் வன்னிய சமூக மக்களை பகடைக்காயாக வைத்து கூட்டணி பேரம் பேசுகிறார் ராமதாஸ். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அரசியல் சூதுவில் பணயம் வைத்து அரசியல் பேரத்தை வலுப்படுத்த துடிக்கிறார்கள்.

சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? மூத்த தலைவர்களை புறம் தள்ளிவிட்டு அன்புமணி தலைவரானது எப்படி?. ஜி.கே.மணி வகித்த தலைவர் பதவியை எதற்காக அன்புமணிக்கு கொடுத்தார்கள்? "10.5% இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் நிற்காது என அனைத்தும் அறிந்ததாய் சொல்லும் ராமதாஸுக்கு தெரியாதா? என கூறியுள்ளார்.