"சென்னையில் இருந்து வரும் 9ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்"- சிவசங்கர்
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 22,792 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ பொங்கலையொட்டி சென்னையில் இருந்து ஜனவரி 9 முதல் 14ஆம் தேதி வரை 22,797 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு முன்பதிபு செய்ய கிளாம்பாக்கத்தில் 10 கவுன்ட்டர்கள் செயல்படும். பொங்கலுக்காக தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஊருக்கு செல்லும்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஓஎம்ஆர், திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்யலாம்” என்றார்.


