கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய வசதிகள் உள்ளது- அமைச்சர் சிவசங்கர்

 
சிவசங்கர்

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். நேற்று முதல் கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கப்பட்டு வரும் நிலையில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Image

இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்து நிறுத்தப்பட்டுள்ள இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஆம்னி பேருந்து ஓட்டுநர்களிடம் உறையாற்றினார்.  மேலும் ஆம்னி பேருந்து நடைமேடை பகுதி ஆய்வு மேற்கொண்ட பிறகு SETC பேருந்து நிலையத்தில்  இருந்து மினி பேருந்தில் பயணம் மேற்கொண்டு (MTC) சென்னை மாநகர பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பேருந்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சென்னையில் இருந்து வந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து சார்வை அணிவித்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட மிக பிரம்மாண்டமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைத்து கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “90 சதவீத ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகளை இயக்க ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். ஆம்னி பேருந்துகளுக்கு கோயம்பேட்டைவிட கூடுதல் வசதிகள் கிளாம்பாக்கத்தில் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. பயணிகளுக்கும் வசதியாக இருக்கும். சென்னை நகரிலிருந்து கிளாம்பாக்கம் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று 440 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. 

மார்ச் மாத இறுதிக்குள் முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் ஏற்படுத்தப்படும். நாளை முதல் சிறுசேரி சிப்காட்டிற்கும் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு 7,000 சதுர அடி அளவு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் ஆம்னிபேருந்துகளை நிறுத்த போதிய வசதிகள் உள்ளது. சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பார்க்கிங் வசதி இல்லை என தவறான தகவல்களை கூறி வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு செல்லக் கூடாது” என்றார்.