ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை- சிவசங்கர்

 
சிவசங்கர்

விழாக் காலங்களில் போதுமான அளவிற்கு சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் எந்த பேருந்தும் நிறுத்தப்படவில்லை: இபிஎஸ்-க்கு அமைச்சர் சா.சி. சிவசங்கர் பதில்- Dinamani

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் 3 கோடி மதிப்பில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி திருவுருவ சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைக்கும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அமைக்கப்பட இருக்கும் நினைவு அரங்கில் மொழிப்போர் தியாகி சின்னசாமியின்  புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “எப்போதும் இல்லாத அளவிற்கு விழாக் காலங்களில் அதிகளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வரக்கூடிய தீபாவளி பண்டிகை ஒட்டியும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது பிளைட் இல்லை, ஆம்னி பஸ்தான்.. சென்னை டூ நெல்லை கட்டணம் ரூ.3400..  இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு? | Omni Bus Owners Association has released  new fare details for Omni buses ...

கடந்த ஆண்டை விட இவ்வாண்டு ஆம்னி பேருந்துகளில்  கூடுதலாக ஐந்து சதவீத கட்டணத்தை குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விழா காலங்களில் பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர் செல்வதற்கு தமிழ்நாடு போக்குவரத்து துறை போதுமான அளவு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்றார்.