காலை, மாலை போன்ற நேரத்தில் பேருந்து சேவையில் பிரச்னை இல்லை - அமைச்சர் பேட்டி

 
sivasankar

அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார். 

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,   பேருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நள்ளிரவு நேரத்தில்தான் எழுந்துள்ளது. காலை, மாலை போன்ற நேரத்தில் பிரச்னை இல்லை . நேற்று முன்தினம் இரவு 133 பேருந்துகள் திருச்சிக்கு சென்றன. அதிகப்படியான பயணிகள் வருகையால் 130 கூடுதல் பேருந்துகள் அனுப்பப்பட்டன . அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர்.

கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்குவது போன்ற தோற்றத்தை சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் செய்கின்றனர். முடிச்சூர் பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும் என கூறினார்.