UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவி - அமைச்சர் சேகர் பாபு நேரில் வாழ்த்து.

UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவியை, அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து வாழ்த்தினார்
மத்திய அரசு தேர்வாணையத்தினால் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், முதல் 4 இடங்களை பெண்களே பிடித்து அசத்தியுள்ளனர். இதில் இஷிதா கிஷோர் என்பவர் இந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 39 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த மாணவி ஜீஜீ தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜீஜீ, தேசிய அளவில் 107வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பாகும். இதற்கிடையே மாணவி ஜூஜூ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற விரும்புவதாக் தெரிவித்திருந்தார். இந்நிலையில் UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவியை, அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும் உடனிருந்தார்.