கோவில் திருவிழாவில் பக்தர்களை பார்த்து “சோறு திங்கிறியா இல்ல..” என்று அசிங்கமாக கேட்ட அமைச்சர் சேகர்பாபு

 
சேகர்பாபு சேகர்பாபு

குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் தேரோட்டத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் அமைச்சருக்கும், இந்து அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ வைரலாகிவருகிறது.


குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் தேர் திருவிழா இன்று நடைப்பெற்ற நிலையில் தேரோட்டத்தை தமிழ்நாடு இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு திருவடம் பிடித்து துவக்கி வைத்தார். அப்பொழுது தேரோட்ட நிகழ்வில் கலந்து கொண்ட சில இந்து அமைப்பினர் திருவிழா தேராட்டத்தில் திட்டமிட்டு பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் காவல்துறையினர் முன்னிலையில் கோவில் திருவிழா என்றும் கூட கருதாமல் வீரசாகவர்க்கு ஜே என கோஷம் எழுப்பினார்கள். இதனால் கோபம் அடைந்த அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் வாக்குவாதம் செய்ததுடன், பக்தர்களை பார்த்து “சோறு திங்கிறியா இல்ல” என்று கேட்டார். இதனால் அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டு விட கூடாது என்பதால் அங்கு இருந்து அமைச்சர் சேகர் பாபுவை அதிகாரிகள் அழைத்து சென்றார்கள். இந்நிலையில் சாகவர்க்கு கோஷம் எழுப்பியவர்கள் குறித்த விடியோ ஆதாரம் வைரலாகி வருகிறது.