அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை!!
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலக்க துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்ச செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு என்று விசாரணைக்கு வருகிறது.