“கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்ல வேண்டும்”- செந்தில் பாலாஜி

 
செந்தில் பாலாஜி

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட  திமுக சார்பில் இப்தார் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Image


நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “234 தொகுதிகளுக்கும் சமமான வளர்ச்சியை தரக்கூடிய அளவில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின்.. பொதுவாக அரசியல் தலைவர்கள் நமக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தவர்களுக்கு முதலில் நல்லது செய்யவேண்டும் என நினைப்பார்கள். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி இல்லை. எல்லோருக்கும் எல்லாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டுவருகிறார்.  கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.  234 தொகுதிகளுக்கும் தானே சட்டப்பேரவை உறுப்பினராக செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கோவையில் தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தவுடன் ஏறத்தாழ ரூ.430 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. போட்டித்தேர்வுக்கு தயாராவோருக்காக 7 மாடி நூலகம் அமைக்கப்பட்டுவருகிறது. வரும் ஜனவரி மாதம் அந்த நூலகத்தை முதலமைச்சர் திறந்துவைக்கவுள்ளார்” என்றார்.