ஓபிஎஸ் அறிக்கையை விமர்சித்த அமைச்சர் செந்தில்பாலாஜி

 
senthil balaji

மின்சார கட்டணத்தில் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்தியதை மறைத்துவிட்டு, மறந்துவிட்டு ஓபிஎஸ் அறிக்கை  அறிக்கை வெளியிட்டுள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

செந்தில் பாலாஜி: அதிமுகவில் பெற்ற வளர்ச்சியும், அமமுகவில் அடைந்த சரிவும் -  BBC News தமிழ்

கோவை மாநகராட்சி தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கோவை சாரமேடு பகுதியில் உள்ள நியூ போயஸ் கார்டன் பகுதியில் ரூ.25.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோவை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத சாலைகள் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் என கணக்கிடப்பட்டு சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய தார்சாலைகளாக அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக முதலைமைச்சர் 200 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.இ ன்று 3.18 கோடி மதிப்பிலான 7.01 கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள சாலைகள் கணக்கிடப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்படும்.

ஜிஎஸ்டி நடைமுறை 2017இல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் இந்த ஆட்சியில் மின்சார கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூலிப்பது போல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது கடந்த ஆட்சியில் 2018 ல் கொண்டுவரப்பட்டது. அது அவருக்கு தெரியாமல் போய்விட்டது. இது கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்பில் மீட்டர் பொருத்தக்கூடிய அந்தப் பணியும் கடந்த ஆட்சியில் 2016 இல் இருந்து நடைமுறையில் உள்ளது. மேலும் தற்போது விவசாயிகளுக்கு வந்த பிரச்சனை போல அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் மாநகராட்சியில் நிறைய தவறுகள் நடந்து உள்ளது.அவை கண்டறியப்பட்டு யார் இதுபோன்ற தவறுகளை செய்தார்களோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓ.பி.எஸ்.,ஒரு அறிக்கை வெளியிடுவதற்கு முன் கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை தெரிந்து வெளியிட்டிருக்க வேண்டும். கடந்த ஏழு மாத காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். ஏழு எட்டு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார்.

தற்போது நடப்பது நல்லாட்சி. தற்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 234 தொகுதியிலும் தளபதி வெற்றி பெறுவார். அப்படி ஒரு மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது” என தெரிவித்தார்.