கோடைக் காலத்தில் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி

 
senthil balaji

கரூர் ராயனூர் பகுதியில் நாளை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஒரு லட்சத்து 1 இலட்சத்து 22,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களின் தீர்ப்பு என்பது முதல்வர் வழங்கிக் கொண்டிருக்கும் மகத்தான சாதனைகளை அங்கீகரிக்கக்கூடிய வகையில் உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டம் மற்றும் கட்சி சார்பில் அரசு காலனி பகுதியில் நடைபெறும் ரேக்ளா பந்தயம், கோடங்கிபட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மூத்த முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு ஆகியவற்றில் கலந்து கொள்கிறார். இதனையடுத்து ராயனூர் திடலில் விழா நடைபெறும் அரங்கில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகிறது. விசைத்தறிக்கு 3 நிலையிலான  மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றப்படுகிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்படுகிறது.  2021 தேர்தல் வாக்குறுதிப்படி, 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக இலவச மின்சாரம் உயர்த்தப்படுகிறது. 

கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது. அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.  ஏற்கெனவே ஒரு மாதத்துக்கு  முன்பே அறிவிக்க வேண்டியது ஈரோடு இடைத்தேர்தலால் காரணமாக அரசாணை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது முதலமைச்சர் பிறந்த நாளையொட்டி மார்ச் 1ஆம் தேதி முன் தேதியிட்டு அறிவிக்கப்படுகிறது.கோடைக் காலத்தில் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது” என்றார்.