ஒன்றுக்கு மேல் மின் இணைப்பு பெற்றால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? - அமைச்சர் விளக்கம்

 
senthil balaji

ஒருவா் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2.67 கோடி மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி முடிந்துள்ளது. 67,000 போ் மட்டும் மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மின்சார வாரியத்தைப் பொருத்தவரையில் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. ஒருவா் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

இந்த ஆண்டு கோடை காலத்தில் உச்சபட்ச மின்தேவை 18, 500 மெகாவாட்டாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதேசமயம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க, மின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறதுஇந்த ஆண்டைப் பொருத்தவரையில், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரமானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.அடுத்த ஆண்டுமுதல் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி கோடை காலத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கத் தேவையான பணிகளை மின் வாரியம் தொடங்கியுள்ளது. இவ்வாறு கூறினார்.