அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உயர் ரத்த அழுத்தம்!

 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்..

ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பலன் கிடைக்காததால், அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒரு மணி நேரம் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.  

செந்தில் பாலாஜி


 
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உயர் ரத்த அழுத்தம் என தகவல் வெளியாகியுள்ளது. 150/100 MmHgல் தொடர்ந்து இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயிற்றுப்புண், குடல் புண்ணுக்கு காலையிலேயே சிறப்பு குழுவினர் சிகிச்சையை தொடங்கியதாக கூறப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகு அடுத்தகட்ட சிகிச்சை குறித்து மருத்துவக்குழு முடிவு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.