அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனு தாக்கல்

 
செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஏழாம் தேதி முதல் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை ஐந்து நாட்கள் விசாரணை நடத்தியது. அதன்பின், அமலாக்கத்துறை தரப்பில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட  பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை மற்றும் ஆவணங்களை டிரங்க் பெட்டியில் தாக்கல் செய்யபட்டது. தொடர்ந்து செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். 

செந்தில் பாலாஜி

இந்நிலையில் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்.15ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அடுத்த காவல் நீட்டிப்புக்கு செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும் காணொலி வாயிலாக ஆஜாரனால் போதுமானது எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் எனவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று திருப்பி அனுப்பியது குறிப்பிடதக்கது.