அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிதத்தால் அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அடுத்த நாளே அவர் தமிழ்நாடு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். இது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரது சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.