தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைப்பா?- செங்கோட்டையன் விளக்கம்

 
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைப்பா?- செங்கோட்டையன் விளக்கம்

இடைத்தேர்தலைப் பொறுத்தவரை நாம் மாபெரும் வெற்றியை அடைவோம். முதல்வர் விஜய் எங்கு சென்றாலும் அங்கே வெற்றிதான் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இடைத்தேர்தலைப் பொறுத்தவரை நாம் மாபெரும் வெற்றியை அடைவோம். முதல்வர் விஜய் எங்கு சென்றாலும் அங்கே வெற்றிதான். விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இடைத்தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்து சொல்கிறோம். மதுராந்தக, தாராபுரம் இடைத்தேர்தலுக்கு வரும் 16ஆம் தேதி தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வர்.

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்படவில்லை. வருகிற செப். 15ஆம் தேதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் முதியோர் உதவித்தொகை,கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உறுதியாக வழங்கப்படும். மத்திய அரசு இந்தத் திட்டத்தின் பெயரை மாற்றியதே தற்காலிகத் தாமதத்திற்கு காரணம்.  விமர்சனங்களை தாங்கி கொள்வோம். ஆனால் அவை நேர்மையாக இருக்க வேண்டும். அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்வெட்டு குறைவாக உள்ளது” என்றார்.