முதலமைச்சருக்கு கொரோனா வராது; வந்தாலும் சரியாகிவிடும்- அமைச்சர் செல்லூர் ராஜூ!

 

முதலமைச்சருக்கு கொரோனா வராது; வந்தாலும் சரியாகிவிடும்- அமைச்சர் செல்லூர் ராஜூ!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூரராஜூ, “மதுரையில் கொரோனா பரிசோதன அதிகப்படுத்தப்பட்டுள்ளது.வெளி மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு மக்கள் அதிகமாக வருகின்றனர். தொடர் கண்காணிப்பில் எல்லைகள் உள்ளன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும். நோய் வராது என்று தைரியமாக மக்கள் வெளியே வருகிறார்கள். முதலமைச்சர் பிரதமரிடம் கொரோனா நிதியாக 3000 கோடி கேட்டுள்ளார். மத்திய அரசிடம் தொடர்ந்து நிதியை பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

முதலமைச்சருக்கு கொரோனா வராது; வந்தாலும் சரியாகிவிடும்- அமைச்சர் செல்லூர் ராஜூ!

முதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஜெயலலிதா இருந்தால் எப்படி கருணையும் பாசத்தோடும் இருப்பாரோ அதுபோல எடப்பாடி உள்ளார். முதல்வர் எங்களுக்கு வழிகாட்டியாய், முன்மாதிரியாய் உள்ளவர். சக அமைச்சர்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர். முதல்வருக்கு கொரானா வராது. வந்தாலும் உடனே போய்விடும். ஒபிசி இட ஓதுக்கீடு விவகாரத்தில் திமுக சொந்தம் கொண்டாடுவது யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது என்பது போல இருக்கிறது. அரசுக்கு கிடைத்த வெற்றி இது. நல்ல மனம் இல்லாததால் அரசை பாராட்ட ஸ்டாலினுக்கு மனமில்லை” எனக்கூறினார்.