“உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்" - அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி

 
sekar babu

சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

sekar babu

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு , பாதயாத்திரை எடுபடாததால் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என மடைமாற்றுகிறார் அண்ணாமலை; அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ மிரட்டல்களை நான் சந்தித்து இருக்கிறேன் . உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்.

Annamalai

சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்; ஆர்ப்பாட்டம், போராட்டம் இவற்றின் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது .12,000க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் 71,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது; பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.