“இந்தி பேசும் மக்களும் மனிதர்கள் தான்”- சேகர்பாபு

 
சேகர்பாபு சேகர்பாபு

திமுகவை பொருத்தவரை இந்தி படிக்கக் கூடாது இந்தி மக்களை நேசிக்க கூடாது என்பது அல்ல. தமிழகத்தின் மீது வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் பொழுது அதை எதிர்க்கின்ற இயக்கம் திமுக என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சேகர்பாபு

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னை சத்யா நகரில்  அமுத கரங்கள் நிகழ்ச்சியில்  அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு பொது மக்களுக்கு காலை உணவுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு, “பிப்ரவரி 20ஆம் தேதி 249 நாளாக 491 இடங்களில் தினம் தோறும் ஒரு நாளைக்கு இரண்டு இடங்கள் என்று அமுத கரங்கள் என்ற தலைப்பில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. நாளை 250 நாளாக நடைபெறவுள்ளது. எங்களுடைய நிலை திமுகவை பொருத்தவரை இந்தி படிக்கக் கூடாது இந்தி மக்களை நேசிக்க கூடாது என்பது அல்ல. தமிழகத்தின் மீது வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் பொழுது அதை எதிர்க்கின்ற இயக்கம் திமுக. எங்கள் முதல்வர் கொள்கை எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். ஆகையால் இந்தி பேசும் மக்களும் மனிதர்கள் தான், அவர்களும் இந்த நாட்டினுடைய மக்கள். எல்லோருக்குமான அரசு இந்த அரசு எல்லோருக்குமான கட்சி திராவிட முன்னேற்ற கழகம்” என்றார்.