“திமுக ஆட்சியில் 114 தேர்கள் ரூ.74 கோடியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது”- சேகர்பாபு

 
சேகர்பாபு

சென்னை பாடியில் அமைந்துள்ள 1000 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் புதிய திருத்தேர் செய்தல் மற்றும் திருக்குள திருப்பணி சீரமைத்தல் பூமி பூஜை விழா மற்றும்  அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் பாலாலயம் பூஜை நடைபெற்றது.

 கமிஷன்,கலெக்‌ஷன், கரப்ஷன் இதுவே அதிமுகவின் தாரக மந்திரம்  -  சேகர்பாபு குற்றச்சாட்டு..

இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலைத்துறை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து நடைபெறாத பக்தர்கள் நலன் சார்ந்த திருக்கோயில் உடைய திருப்பணிகள் திமுக அரசுக்கு நிகராக எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை. கைலாதநாதர் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான திருக்கோயிலாகும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் சிதலமடைந்த நிலையிலே இந்த கட்டிடம் சாலையின் மட்டத்திற்கு கீழாக இருக்கக்கூடிய காரணத்தால் தரை மட்டத்திற்கு இக்கோயிலை உயர்த்தி கட்டுவதற்கு இந்து சமய அறநிலைத்துறையிடம் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதன் ஏற்று 3.49 கோடி ரூபாயில் திருப்பணிகள் தற்போது துவக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு எண்ணிக்கை 3000 தாண்டும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. கோவூரில் 40 ஆண்டு பழமையான திருக்கோவிலில் உள்ள தேர் புதுப்பித்து முடிவுற்று இன்றைக்கு தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 114 தேர்கள் 74 கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக ஓடாமல் இருந்த தங்கத் தேர்களை வீதி உலா வர வைத்தது திமுக அரசு தான்.  திருத்தேர் மராமாத்து பணிக்கு சுமார் 16 கோடி ரூபாயில் 64 திருத்தேர்கல் பரமாத்து பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் நிறைவுற்றிருக்கின்றன. திருத்தேர் பாதுகாக்கின்ற வகையில் 183 திரு கோயில்களுக்கு மழை வெயில் காலங்களில் தேர்தல் நனையாமல் இருப்பதற்காக 26 கோடி ரூபாய் செலவில் 183 திருத்தேர் பாதுகாக்க கொட்டகைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஐந்து தங்கத்தை 31 கோடி ரூபாயில் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. 9 வெள்ளி தேர் 29 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.திருக்குளங்கள்  திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய நான்கு குணங்கள் 4.20 கோடி ரூபா செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மரமாத்து பணி நீர்நீர்களை பாதுகாப்பதும் , தப்பம் நடத்தாத திருக்கோயில்களை  நடத்த வைப்பதும் , திமுக ஆட்சியில் தான். இதுவரை நநிலம் மீட்பு எடுத்துக் கொண்டால் சுமார் 1,19,767 இடங்களில் நிலங்களுக்கு உண்டான அளவு கற்கள் கட்டிவிடப்பட்டிருக்கின்றன. நிலை அமைப்பு இது வரை 7126 கோடி ரூபாயில் 7437 ஏக்கர் தோழா 940 திருக்கோயில்களில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளிடமிருந்து  மீட்கப்பட்டிருக்கிறது. அதேபோல நிர்வாகம் அனுமதிக்காத சுமார் 24572 பணிகளுக்கு இதுவரையில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுடைய ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 5710 கோடி ரூபாய் ஆகும். எந்த ஆட்சியிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்மட்ட எஸ்எஸ்எல் சி எனப்படும் கூட்டம் மூன்று மாதம் மற்றும் நான்கு மாதங்களுக்கு நடைபெற்று வந்தன. திருக்கோயில் கட்டுமான பணிகளுக்கும் புறநானமைப்பு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வல்லனர் குழுக்கள் அமைக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த கூட்டங்கள் கூட்டப்பட்டு வந்ததன் விளைவாக 11,386 திருக்கோவிலுக்கு இதுவரையில் தொல்லியல் அனுமதி உயரமற்ற குழுவால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்