சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் மரண அடி வழங்குவர்- சேகர்பாபு

 
சேகர்பாபு

2026 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாடு மக்கள் மரண அடியை வழங்குவார்கள்  என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில்  ராமேஸ்வரம் -  காசி ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணம் செல்லும் மூத்த குடிமக்களுக்கு பயண வழி பைகளை வழங்கி அவர்களை வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் சேகரபாபு, "வயது முதிர்ந்தோர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஆட்சி அமைந்த பிறகு சோளிங்கர், ஐயர் மலை ரோப் கார் திட்டம் கொண்டுவரப்பட்டது. திருத்தணியில் மலை பாதைக்கு மலைக்கு சென்ற பிறகு அங்கு படிகளில் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது அதனால் அங்கு 5 கொடி செலவில் லிப்ட் அமைக்கப்பட்டு வருகிறது, வயது முதிர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக ஒரே நேரத்தில் பல கோவில்களுக்கு சென்று வர ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு  இந்த ஆண்டு 420 பேர்  அறிவிக்கப்பட்டு 60 நபர்கள் இன்று பயணம் மேற்கொள்கின்றனர்,

இந்த பயணத்திற்கு இதுவரை 2 கோடியே 30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது மருத்துவ குழு, இந்து சமய அறநிலைய துறையினர் 3பேர் உடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர், காசி பயணம்7 நாட்கள் பயண திட்டம் அமைத்து அவர்களுக்கு15 வகையான பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு எதிராக நக்சல் போன்று செயல்படுகிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.  திமுக ஆட்சியின் மீதும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக எதை திணிக்கும் போதும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் வெகுண்டு எழுவார்கள். அப்படி திணிக்கின்ற வேலையை விடாமல் தொடர்ந்து செய்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனும் அதற்கு எதிராக வெகுண்டு எழுவார்கள், அண்ணாமலை அரசியல் செய்ய எதுவும் இல்லாத நிலையில், கோயபல்ஸ் போன்று பேசியதையே திரும்ப திரும்ப பேசி வருகிறார். 2026 ஆம் ஆண்டு தேர்தல் என்பது மக்கள் அவர்களின் செயல்பாடுகளை பார்த்து வருகின்றனர். அதில் பெறப்போகும் அடி பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மரண அடியாக இருக்கும்" என்று கூறினார்.