“கர்நாடகா டூப் போலீஸ்”- அண்ணாமலையை கலாய்த்த சேகர்பாபு

 
சேகர்பாபு

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக எழும்பூர் தெற்கு பகுதியில் உள்ள டாக்டர் சந்தோஷ் நகர் ஹஸ்சிங் போர்டு மற்றும் புதுப்பேட்டை அருகே உள்ள திருவேங்கடம் தெருவில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார். 

அமைச்சர் சேகர்பாபு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் ஒரு நாளுக்கு ஆயிரம் நபர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறோம். மக்கள் மகிழ்ச்சியாக உணவுகளை பெற்று வருகிறார்கள். ஒரு மாதம் காவல்துறையை தன்னிடம் கொடுங்கள் போதைப்பொருள் புழக்கத்தை அடக்கி விடுகிறேன் எனவும் காவல்துறை முறையாக செயல்பட வில்லை எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். கண்ட்ரோல் பண்ணுவது குறித்து அவர் பேசி நாங்கள் கத்துக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரது கட்சியையே அவரது கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள முடியவில்லை. அப்பாவும் மகனும் மேடையில் சண்டை போட்டுக் கொள்ளும் சூழல் உள்ளது. அவர் எங்கே தமிழகத்தை கண்ட்ரோல் செய்யப் போகிறார்?

திமுக 8 மாதத்தில் கூட்டணியிலிருந்து தனிமைப்படுத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது அவரின் நப்பாசை அது. இந்தக் கூட்டணி ஏதோ அரசியல் லாபத்திற்காக ஏற்பட்ட கூட்டணி அல்ல, கொள்கை சார்ந்த கூட்டணி இந்த கூட்டணி மேலும் மேலும் உறுதியாக இருக்கிறது என்பதுதான் எடுத்துக்காட்டு கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முதல்வரின் பிறந்தநாள் நிகழ்ச்சி. இது உறுதிமிக்க கூட்டணி, யாரும் இடித்து தகர்த்து எறிய முடியாத கற்கோட்டைகளால் இரும்புக்கோட்டைகளால் ஆன கூட்டணி, எந்நாளும் சிதற விடுவதற்கு அரசியல்  முதலமைச்சர் விடமாட்டார். சீமான் விவகாரத்தில் காவல்துறை நடந்து கொண்டது ஏற்புடையதல்ல என அண்ணாமலை கூறுகிறார். யார்யெல்லாம் சமூக விரோத செயல்களை ஈடுபடுகிறார்களோ... யார்யெல்லாம் சட்டத்தை மீறுகிறார்களோ... அவர்களுக்கெல்லாம் ஆதரவளிக்கின்ற கர்நாடகா டூப் போலீஸ் தான் அண்ணாமலை” என விமர்சித்தார்.